Close

Kodaikanal – Garlic Geographical indication

Publish Date : 21/04/2023
.

செ.வெ.எண்:-20/2023

நாள்:15.04.2023

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு அங்கிகார சான்றிதழ் விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்று அதன் அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.04.2023) நடைபெற்றது.

இவ்விழாவில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் K.கலா அவர்கள், சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் உறுப்பினர் செயலர் முனைவர் R.சீனிவாசன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்த விபரம் பின்வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டம், வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்பங்களை கொண்ட மாவட்டமாகும். நமது மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதியில் விவசாயிகளால் விளையவைக்கும் பூண்டிற்கு உலக அளவில் தனித்துவம் பெற்று மருத்துவ குணத்துடன் இருந்து வருகிறது. இப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு மேலும், சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பூண்டின் மகத்துவம் மற்றும் மலைப்பூண்டின் மருத்துவ குணத்தினை உணர்ந்து மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் தயார் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் அதற்கு விவசாய கடன் மானியத்துடன் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,

இவ்விழாவில் கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகள் மலைப்பூண்டினால் உருவாக்கப்பட்ட மாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்களுக்கும், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் K.கலா அவர்களுக்கும் பழங்கால வாத்தியங்கள் முழங்க பூண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மலைப்பூண்டிற்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைக்கிராம விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சீலா, தேர்வு கட்டுப்பட்டு அலுவலர் திருமதி கிளாராதேன்மொழி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரு.நாட்ராயன், திரு.செல்லய்யா, திரு.பாலகிருஷ்ணன், திரு.தனமுருகன், திரு.கோபால்சாமி, திரு.அருள்ஜோதி, கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.