Kodaikanal hills area, banned plastic
செ.வெ.எண்:-76/2025
நாள்:-25.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல மற்றும் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (Plastic) பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல மற்றும் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 84 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 1989-ன் விதி 172(3)-ன் படி, வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என அனுமதிச்சீட்டு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி (Plastic) பொருட்கள் மற்றும் ஐந்து லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் தொடர்ந்து வாகனங்களில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு எடுத்துச் சென்றாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் செல்ல அனுமதித்தது கண்டறியப்பட்டாலோ, அவ்வாகன அனுமதிச் சீட்டின் மீது மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 86 -ன் கீழ் அனுமதிச் சீட்டு இரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும், என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.