Kodaikanal Taluk- Village Assistant Vacancy
செ.வெ.எண்:-05/2022
நாள்:02.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் காலியாக உள்ள 2 (இரண்டு) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலிப் பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விவரங்கள் பின் வருமாறு:
(1)பெரியூர் கிராமம் – ஆதி திராவிடர் (பெண்) முன்னுரிமையற்றது (ஆதரவற்ற விதவை),
(2)தாண்டிக்குடி கிராமம் – மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (பொது),
முன்னுரிமையற்றது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2022 அன்று குறைந்த பட்சம் 21 ஆண்டுகள், அதிக பட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமத்திற்கு 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப் பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். காலியாக உள்ள 2 (இரண்டு) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் கொடைக்கானல் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.