Close

Kodaikannal Festival – 2022 Inauguration

Publish Date : 23/05/2022

செ.வெ.எண்:-37/2022

நாள்:22.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2022 தொடக்கவிழா 24.05.2022 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. கோடை விழாவை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். தொடர்ந்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்காண்சியினையும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரவாணி அவர்கள் கண்காட்சி அரங்கையும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள் கலைநிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற வுள்ளனர். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.

அரசு முதன்மை செயலாளர்ஃசுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மரு.பி.சந்திரமோகன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் ஃவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திரு.சி.சமயமூர்த்தி, சுற்றுலா இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஃ தமிழ்நடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திரு.சந்தீப்நந்தூரி, இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைஃ மேலாண்மை இயக்குநர்(டான்ஹோடா) மரு.இரா.பிருந்தாதேவி ஆகியோர் சிறப்புறையாற்றவுள்ளனர்.

விழாவில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர்(கொடைக்கானல்;) திரு.ப.கொ.திலீப், இ.வ.ப., மாவட்ட வன அலுவலர்(திண்டுக்கல்) திரு.செ.பிரபு, இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முனைவர் ச.முருகேசன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், கொடைக்கானல் நகராட்சித்தலைவர் திரு.பா.செல்லத்துரை, துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி சுவேதா ராணி கணேசன், துணைத்தலைவர் திருமதி முத்துமாரி சுரேஷ்பாண்டி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 24.05.2022 முதல் 02.06.2022 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.