Kodaikannal Festival – Sports
செ.வெ.எண்:-41/2022
நாள்:23.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 24.05.2022 முதல் 02.06.2022 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் விபரம் வருமாறு:-
24.05.2022 அன்று மாலை 2 மணிக்கு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான இசை நாற்காலி, 25.05.2022 அன்று மாலை 2 மணிக்கு கயிறு இழுத்தல்(ஆண்கள் மற்றும் பெண்கள்), மாலை 3 மணிக்கு பானை உடைத்தல்(ஆண்கள் மற்றும் பெண்கள்), 26.05.2022 அன்று காலை 10 மணிக்கு மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி(சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள்), மாலை 2 மணிக்கு சாக்கு ஓட்டம்(சிறுவர் மற்றும் சிறுமியர்) ஆகிய போட்டிகள் நடைபெறும்.
மூஞ்சிக்கல் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் விபரம் வருமாறு:-
27.05.2022 அன்று காலை 9 மணிக்கு வாலிபால் போட்டி(ஆண்கள் மற்றும் பெண்கள்), 28.05.2022 அன்று காலை 9 மணிக்கு ஹாக்கி(ஆண்கள் மற்றும் பெண்கள்), 29.05.2022 அன்று காலை 9 மணிக்கு கபாடி போட்டி(ஆண்கள் மட்டும்), 30.05.2022 மற்றும் 31.05.2022 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு கால்பந்து போட்டிகள்(ஆண்கள்) ஆகியவை நடைபெறும்.
மினி மாரத்தான்(ஆண்கள் 10 கி.மீட்டர், பெண்கள் 5 கி.மீட்டர் தூரம்) 01.06.2022 அன்று மாலை 2 மணிக்கு பிரையண்ட் பூங்காவில் நடைபெறும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 0451-2461162 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.