Kudimaramathu works at Oddanchathiram

Publish Date : 05/09/2019
1

செ.வெ.எண்:-12/2019 நாள்:05.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டப்பணிகள்(2019-2020) நடைபெற்று வரும் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டப்பணிகள்(2019-2020) நடைபெற்று வரும் பகுதிகளில் இன்று (05.09.2019) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளின் நலன் கருதியும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் குடிநீர், விவசாய தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு குடிமராமத்து திட்டப்பணிகள், தமிழக அரசால் போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்துத் திட்டப்பணிகள்(2019-2020)ன் கீழ் ஒட்டன்சத்திரம் வட்டம், தாசாரிப்பட்டி கிராமம், புதுக்குளம் முத்துபூபாலசமுத்திரம் கண்மாயில்; ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும்;, காவேரியம்மாபட்டி கிராமம், பெரியகுளம் கண்மாயில் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணியின்போது, வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் திண்டுக்கல் மாவட்டத்தில் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பருவமழை காலம் தொடங்குவதற்குள் விரைந்து முடிக்குமாறு, துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, பழனி சார் ஆட்சியர் திருமதி சு.உமா, இ.ஆ.ப., ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சரவணன், துணை வட்டாட்சியர் திரு.ஜெகதீஸ் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.