Close

Kudimaramathu works – Collector inspection Palani

Publish Date : 08/08/2019
1

2

செ.வெ.எண்:17/2019 நாள்:06.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டம், பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்த 45 பணிகள் ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்குட்பட்ட மாப்பிள்ளை நாயக்கன்குளம், குமார நாயக்கன்குளம், பாப்பன்குளம மற்றும் பாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மந்தைகுளம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை இன்று (06.08.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின்கீழ் இன்றைய தினம் பழனி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளபட்டது. நங்காஞ்சியார் வடிநிலக்கோட்டம், பழனி கட்டுப்பாட்டில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதியில் மொத்த 45 பணிகள் ரூ.17.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதில் 6 கால்வாய்களில் தூர்வாருதல், செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி மதகுகளை சீர் அமைக்கும் பணிகள், 40 குளங்களில் வரத்து வாய்க்கால்களில் குளம் மற்றும் குளக்கரைகளில் செடி கொடிகளை அகற்றி கரைகளை பலப்படுத்துதல், மதகுகளில் உள்ள அதைப்பான்களை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளளப்பட்டு, இதன் மூலம் இப்பகுதியில் மொத்தம் 22,604 விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

அதில், பழனி வட்டத்திற்குட்பட்ட ஆயக்குடி பேரூராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மாப்பிள்ளை நாயக்கன்குளம், ரூ.27.50 இலட்சம் மதிப்பீட்டில் குமார நாயக்கன்குளம் மற்றும் ரூ.46.60 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பன்குளம் மற்றும் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் மந்தைகுளம் ஆகியவைகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், மதகுகள் புனரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகள் மற்றும் ஆக்கிரமைப்புகளை அகற்றுதல் போன்றவைகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவும், அரசால் மேற்கொள்ளப்;பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முழுஒத்துழைப்பு அளித்து, தங்களது பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, பாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்புத்திறன் ஆகியன குறித்து குழந்தைகளை வாசிக்க சொல்லி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து, இப்பள்ளியில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு, புத்தகங்கள் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் தலைமையாசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.காஞ்சித்துரை, பழனி வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.