Kudimaramathu works (Kodaikkanal)

செ.வெ.எண்:43/2019 நாள்:14.07.2019
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பூண்டி மற்றும் கூக்கால் ஆகிய கிராமங்களில் உள்ள குளங்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ்; ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை – மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூண்டி அருங்காட்டு கண்மாய் மற்றும் கூக்கால் கிராமத்தில் கூக்கால் ஆகிய குளங்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ்; மேற்கொள்ளப்படவுடுள்ள பணிகளை இன்று (14.07.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகளின் மதிப்பீடு ரூ.10 இலட்சங்களுக்கு கீழ் உள்ள பணிகள் அந்த பாசன சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசன சங்கம் இல்லாத இடங்களில் முன்னோடி விவசாயிகள் மூலம் நியமன முறையில் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படும். இப்பணிகளுக்கு விவசாயிகளின் பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொகையினை தொழிலாளர்கள் வடிவத்திலோ அல்லது பொருளாகவோ அல்லது ரொக்க பணமாகவோ செலுத்திட வேண்டும்.
இந்தாண்டு 2019-2020-ன்படி, 114 பணிகள் ரூ.34.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கௌ;ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம், கொடைக்கானல் வட்டம், பூண்டி கிராமத்தில் உள்ள அருங்காட்டு கண்மாய் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கூக்கால் கிராமத்தில் உள்ள கூக்கல் குளத்திற்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து குளங்களை ஆழப்படுத்தி, தடுப்பணைகளை பலப்படுத்தி மற்றும் கரைகளை பலப்படுத்துதல்; பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இதன்படி பூண்டி கிராமத்தில் உள்ள அருங்காட்டு கண்மாய் சீரமைப்பதன் மூலம் 168 ஏக்கர் விவாசாய நிலங்கள் பயன்பெறும் மற்றும் கூக்கால் கிரமத்தில் கூக்கால் குளத்தை சீரமைப்பதன் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவாசாய நிலங்கள் பயன்பெறவும் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் இப்பணி அமையும்.
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை செம்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, உதவிப் பொறியாளர் (பொதுப்பணித்துறை) திரு.சௌந்தரம் மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.