Close

Kudimaramathu works Meeting with Farmers

Publish Date : 22/07/2019
1

2

செ.வெ.எண்:61/2019 நாள்:20.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்ட செயலாக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்ட செயலாக்கம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (20.07.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி;த்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தமிழகத்தில் விவசாயிகளின் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட, தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாகவும், போர்க்கால அடிப்படையிலும்; மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் ஒரு பகுதியாக முதல்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புணரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகளின் மதிப்பீடு ரூ.10 இலட்சங்களுக்கு கீழ் உள்ள பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இப்பணிகள் விவசாயி சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடியாக நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையின் திட்டம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களால் செயல்படுத்தப்படும். அப்பணிகள் பொதுப்பணித்துறையினரால் கண்காணிக்கப்படும். மொத்த மதிப்பீட்டில் 10 சதவீத மதிப்பீட்டுத் தொகை பாசன சங்கங்களிலிருந்து உழைப்பாகவோ அல்லது பொருளாகவே மற்றும் பணப்பங்களிப்பாகவே பெறப்பட்டு பணிகளை அவர்களே மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள முதலில் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மூலம் அளவீடு செய்து வழங்கப்படும். மேலும், பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை நிறுவ பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பணிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் இக்கூட்டத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். பணி குறித்து பயிற்சி கையேடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம், பழனியின் கட்டுப்பாட்டில் 80 பணிகள் ரூ.2588.80 இலட்சத்திலும் மற்றும் மஞ்சளாறு வடிநிலக்கோட்டம், பெரியகுளத்தின் கட்டுப்பாட்டில் 34 பணிகள் ரூ.847.20 இலட்சத்திலும் என மொத்தம் 114 பணிகள் 34.36 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இப்பணிகளை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டு;க் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்.குடிமராமத்து பணிகள் விவசாயிகள் தங்களது ஆயக்கட்டுதாரர்களுடன் கலந்து ஆலோசித்து தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்து, சங்கத்தை பதிவு செய்யவும் மற்றும் விவசாயி சங்கள் இப்பணிகளை வடக்கிழக்கு பருவ மழை துவங்கும் முன் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கவும், மேலும் இப்பணிகளை நல்ல தரமான முறையில் விவசாய சங்கள் செய்து முடிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.வேலு, செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலைக்கோட்டம், பெரியகுளம்) திரு.ஏ.குமார், உதவி செயற்பொறியாளர் (மருதாநதி வடிநிலை உபக்கோட்டம், நிலக்கோட்டை)திரு.கே.சௌந்திரம், திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ராஜ்குமார், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி உஷா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் விவசாய சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.