Close

Kudimaramathu works (Nilakkottai Taluk)

Publish Date : 15/07/2019
nlk1

செ.வெ.எண்:42/2019 நாள்:13.07.2019

nlk2nlk3

திண்டுக்கல் மாவட்டம் ம், பொன்னன்குளம் மற்றும் மட்டப்பாறை கண்மாய்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ் மொத்தம் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை – மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னன்குளம் மற்றும் மட்டப்பாறை கிராமத்தில் உள்ள மட்டப்பாறை கண்மாய் ஆகியவைகளில் குடிமராமத்து திட்டத்தின்கீழ்; மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை இன்று (13.07.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீர் வள ஆதாரங்களை மேம்படுத்திட தமிழகம் முழுவதும் பல்வேறு துரித நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறு கட்டுமானம் செய்தல், நீர் வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட சீரமைக்கும் பணிகளின் மதிப்பீடு ரூ.10 இலட்சங்களுக்கு கீழ் உள்ள பணிகள் அந்த பாசன சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசன சங்கம் இல்லாத இடங்களில் முன்னோடி விவசாயிகள் மூலம் நியமன முறையில் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படும். இப்பணிகளுக்கு விவசாயிகளின் பங்களிப்பாக மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் தொகையினை தொழிலாளர்கள் வடிவத்திலோ அல்லது பொருளாகவோ அல்லது ரொக்க பணமாகவோ செலுத்திட வேண்டும்.

இந்தாண்டு 2019-2020-ன்படி, 114 பணிகள் ரூ.34.35 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கௌ;ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம்;, நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட மட்டப்பாறை கிராமத்தில் மேற்கண்ட திட்டத்தின்கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் மட்டப்பாறை கிராம விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து மட்டப்பாறை கண்மாயின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் 10 கி.மீ. தூரத்திற்கு வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேபோன்று, பள்ளபட்டி கிராமத்தில் மேற்கண்ட திட்டத்தின்கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மற்றும் பள்ளபட்டி கிராம விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து பொன்னன்குளத்தின் கரைகளை பலப்படுத்துதல் மற்றும் ஒரு கி.மீ. தூரத்திற்கு வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

இதன் மூலம் சிறுமலையில் இருந்து மாவூர் அணை வழியாக வரப்பெறும் நீரினை பொன்னன்குளத்தில் தேக்குவதன் மூலம் கல்லடிப்பட்டி, பள்ளப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் நிலக்கோட்டை உபரிநீர், அகரம் குளம் வழியாக மட்டப்பாறைக்கு வரப்பெறும் நீரினை மட்டப்பாறை கண்மாயில் தேக்குவதன் மூலம் விளாம்பட்டி, மட்டப்பாறை, முத்துலிங்கப்பட்டி, ராமராஜபுரம், தங்கையாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கும், குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் செய்வதற்கும், நிலத்தடி நீர் உயர்வதற்கும் இப்பணி அடிப்படையாக அமையும். இப்பணிகளை செம்மையாக செய்வதற்கு, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளும் தங்களது பங்களிப்பை அளித்து இப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும்.

இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நீர்நிலைகளை செம்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ராமராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் உள்ள நியாயவிலை கடையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்தும், இருப்புகள் குறித்தும், பதிவேடுகள் குறித்தும், ஸ்மார்ட் கார்டு பதிவுகள் குறித்தும், மேலும் மீனாட்சிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும், வருகை பதிவேடு, புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் மற்றும் அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூலம் மேற்கொண்ட பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர்; (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, மஞ்சளாறு-பெரியகுளம்) திரு.குமார், உதவிப்பொறியாளர்கள் திரு.சவுந்தரம் (மருதாநதி) மற்றும் திரு.நீதிபதி (நிலக்கோட்டை), நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.நவநீதகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.