Close

KVS admission – Notification

Publish Date : 10/05/2025

செ.வெ.எண்:-27/2025

நாள்:-08.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள சில வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தற்போதைய காலியிடங்கள் விவரம் வருமாறு:

3-ஆம் வகுப்பில் 10 இடங்கள், 4-ஆம் வகுப்பில் 8 இடங்கள், 8-ஆம் வகுப்பில் 1 இடம், 10-ஆம் வகுப்பில் 7 இடங்கள், 12-ஆம் வகுப்பு (அறிவியல் பிரிவு) 6 இடங்கள், 12 -ஆம் வகுப்பு (வணிக பிரிவு) 22 இடங்கள் என மொத்தம் 54 இடங்கள் காலியாக உள்ளன.

கேவிஎஸ்(KVS) சேர்க்கை வழிகாட்டுதல்களின்படி, முன்னுரிமைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் பிற நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைகள் நடத்தப்படும்.

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு, https://gandhigram.kvs.ac.in/ என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது காந்திகிராம் பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி முதன்மை முதல்வரை நேரிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.