Close

Labour and Skill Development Department -Housing Scheme

Publish Date : 26/04/2022

செ.வெ.எண்:-67/2022

நாள்:25.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல்வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, பின்வரும் நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட கட்டுமான தொழில் வாரிய உறுப்பினர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு மேல் இருத்தல் வேண்டும், தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. அரசின் வேறு எந்த இலவச வீட்டு வசதி திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 28 ச.மீ வீட்டு மனை இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டு மனை பட்டா இருக்க வேண்டும் அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டு மனை கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும்.

மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர்/திட்ட அலுவலர் DRDA, மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அடங்கிய மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் மாவட்ட அளவில் பயனாளிகளை தேர்வு செய்து சென்னை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, இறுதி பயனாளிகளின் பட்டியல் சென்னை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பெறப்பட்ட பின்பு அனுமதிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மற்றும் அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களின் மூலமாக, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் (கிராம பஞ்சாயத்து) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு தெரிவித்து இத்திட்டத்தினை செயல்படுத்தப்படும் என்ற விவரத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை உரிய விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.