Close

LDM Bankers meeting

Publish Date : 30/05/2025
.

செ.வெ.எண்:-91/2025

நாள்:-29.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆண்டு கடன் இலக்காக ரூ.36,354 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கியாளர்களுக்கான ஆண்டு கடன் திட்டம் 2025-2026-ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆண்டு கடன் இலக்காக ரூ.36,354 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமைக் கடன் இலக்காக ரூ.20,200 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.2.00 இலட்சம் வரை எவ்வித அடமானமும் இல்லாமல் வங்கிகள் பயிர்க்கடன் வழங்கிட வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ரிசர்வ் வங்கி உதவிப் பொதுமேலாளர் திரு.அன்பரசு, நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் திரு.ஹரீஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆனந்த் பிரபாகரன் மற்றும் மாவட்ட அளவிலான வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.