LED VAN (Election Awareness)

Publish Date : 12/03/2019
led

led1

செ.வெ.எண்:-16/2019 நாள்:12.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் மாவட்டத்தில் குறைவான வாக்குபதிவு நடைபெற்ற பகுதிகள் ஆகியவைகளில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்;, வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது – தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்; டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இன்று (12.03.2019) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்யும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் நோக்கில், வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்யும் வகையிலும், மாணவ, மாணவியர்களை கொண்டு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடந்த தேர்தல் காலங்களில் மாவட்டத்தில் குறைவான வாக்குபதிவு நடைபெற்ற பகுதிகள் ஆகியவைகளில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்;, வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வருகின்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் “வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம்” (VVPAT) பயன்படுத்தப்பட உள்ள இந்த இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும், செயல்முறை விளக்கங்களும் காண்பிக்கப்பட்டது.

பொதுமக்கள், தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும், கருத்துகளை தெரிவிப்பதற்காகவும், புகார் தெரிவிப்பதற்காகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘1950’ என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை இயங்குகிறது. அலுவலக வேலை நாட்களில் காலை 09-00 மணிமுதல் இரவு 09-00 மணிவரை இந்த ‘மாவட்ட தொடர்பு மையம்- District Contact Centre” இயங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவினையும், 100மூ வாக்குப்பதிவு என்ற நோக்கத்தினையும் செயல்படுத்துவதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, 100% வாக்களித்து தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்.இ.ஆ.ப அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஜீவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்