Close

Library Meeting

Publish Date : 21/08/2025
.

செ.வெ.எண்:-78/2025

நாள்:-19.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து நூலகர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து நூலகர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.08.2025) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்துவது குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ”திண்டுக்கல் வாசிக்கிறது” என்ற நிகழ்வில் அனைத்து நூலகங்களின் சார்பாகவும், வாசகர் வட்டங்களின் சார்பாகவும் பொது மக்கள், மாணவர்கள் மற்றும் வாசகர்களை புத்தகம் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும், 24.08.2025 அன்று நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பு மாராத்தானில் நூலகத்துறை சார்பாக அனைத்து நூலகங்களிலும் தலா 5 மாணவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், புத்தகங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு அனைத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க ரூ.20,000 மதிப்பிலான கூப்பன்களை வழங்கினார்.

அதனைதொடர்ந்து, திண்டுக்கல் 12-வது புத்தகத் திருவிழா விழிப்புணர்வு மாராத்தான் ஒட்டுவில்லையை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார் மற்றும் திண்டுக்கல் இலக்கிய கள நிர்வாகி திரு.கோவிந்தராஜன், திண்டுக்கல் மாவட்ட அனைத்து நூலகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.