Close

Local Bodies Election Observer Inspection

Publish Date : 07/10/2021
.

.

செ.வெ.எண்:-14/2021

நாள்:06.10.2021

தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர், முதன்மை செயல் அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், விடுபட்டுள்ள பகுதிகளுக்காக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள், குறித்து பல்வேறு இடங்களில் இன்று (06.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 09.10.2021 அன்று பல்வேறு இடங்களில் விடுபட்டுள்ள பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 13-வது ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வார்டில், 9 பூத்துக்களின் வாயிலாக, 5216 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வார்டுக்குட்பட்ட ஏ.ஆவாரம்பட்டி, கள்ளர் நடுநிலைப்பள்ளியில் உள்ள 93 மற்றும் 94 ஆகிய வாக்குச்சாவடிகளில், சுமார் 1357 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளார்கள்.

தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்தலாபுரம், விளாம்பட்டி, எத்திலோடு ஆகிய பகுதிகளை சார்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள ஏ.ஆவாரம்பட்டி கள்ளர் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை, நேரில் பார்வையிட்டு, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்கள். அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாக்குபெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறை, வாக்குகள் எண்ணும் அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய தொகுதி நிதியிலிருந்து ரூ.2 இலட்சம் செலவில், அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தினை பார்வையிட்டார்கள்.

ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சி செயலர் திரு.தி.கிரி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் திருமதி.அனுராதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.மு.ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.