Close

Local Bodies Election – Observer inspection

Publish Date : 12/10/2021
.

செ.வெ.எண்:-24/2021

நாள்:11.10.2021

தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர், முதன்மை செயல் அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை இன்று(11.10.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 தேதி வரையில் காலியாக உள்ள 28 பதவியிடங்களுக்கான தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி,

ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள்-2: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு 13 மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் வார்டு 11.

கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள-4: கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி கிராம ஊராட்சி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி கிராம ஊராட்சி, பழனி ஊராட்சி ஒன்றியம், ஆண்டிப்பட்டி கிராம ஊராட்சி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆவிளிப்பட்டி கிராம ஊராட்சி.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள்-22: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 6, வீரக்கல் கிராம ஊராட்சி வார்டு 7, சீவல்சரகு கிராம ஊராட்சி வார்டு 1 ஆகிய 3 பதவியிடங்கள், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில், பி.விராலிப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 5, செக்கப்பட்டி வார்டு 1, கணவாய்ப்ப்டி வார்டு 4 ஆகிய 3 பதவியிடங்கள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், செட்டிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி வார்டு 9 மற்றும் 15 ஆகிய 2 பதவியிடங்கள், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில், டி.கூடலூர் கிராம ஊராட்சி வார்டு 8, மல்லபுரம் ஊராட்சி வார்டு 7 ஆகிய 2 பதவியிடங்கள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், கோட்டூர் கிராம ஊராட்சி வார்டு 12, பச்சைமலையான்கோட்டை கிராம ஊராட்சி வார்டு 5, எத்திலோடு கிராம ஊராட்சி வார்டு 6 ஆகிய 3 பதவியிடங்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், லெக்கையன்கோட்டை கிராம ஊராட்சி வார்டு 3, கதையிரும்பு கிராம ஊராட்சி வார்டு 2, அம்பிளிக்கை கிராம ஊராட்சி வார்டு 5, தங்கச்சியம்மாபட்டி கிராம ஊராட்சி வார்டு 1 ஆகிய 4 பதவியிடங்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், அழகுப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 9, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், ராஜக்காப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 3, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், தேவாத்தூர் கிராம ஊராட்சி வார்டு 2, வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில், சுக்காம்பட்டி கிராம ஊராட்சி வார்டு 8, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், விருதலைப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 5 ஆகிய பதவியிடங்கள் என மொத்தம் 28 பதவியிடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வார்டு 13 மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியம் வார்டு 11 ஆகிய ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி கிராம ஊராட்சி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி கிராம ஊராட்சி ஆகிய ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 6, வீரக்கல் கிராம ஊராட்சி வார்டு 7, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், செட்டிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி வார்டு 9 மற்றும் 15, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில், செக்கப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 1, கணவாய்ப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 4, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், அம்பிளிக்கை கிராம ஊராட்சி வார்டு 5, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், விருதலைப்பட்டி கிராம ஊராட்சி வார்டு 5, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில், டி.கூடலூர் கிராம ஊராட்சி வார்டு 8 ஆகிய 13 பதவியிடங்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, மேற்கண்ட பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு 09.10.2021 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஒட்டன்சத்திரம் டயட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்திலும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டார்கள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் அடிப்படை வசதிகள், வாக்குப் பெட்டிகள்; பாதுகாப்பு அறை, வாக்குகள் எண்ணும் அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.மு.ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி ஜெசிஞானசேகரன், திரு.ராஜசேகரன், வட்டாட்சியர் திரு.சசி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.