Close

Local Bodies Election Observer

Publish Date : 24/09/2021

செ.வெ.எண்:-45/2021

நாள்:24.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது குறித்து தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளுக்காக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கபட்டுள்ள தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-

தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2021, திண்டுக்கல் மாவட்டத்தில் 28 காலி பதவியிடங்கள் உள்ளது. அதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் காலிப்பதவியிடங்கள் 22, கிராம ஊராட்சி தலைவர் காலிப்பதவியிடங்கள் 4, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் காலிப்பதவியிடங்கள் 2, தேர்தல் பணிகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும். தற்போதைய கோவிட்-19 தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் நேரங்களில் கட்சி மற்றும் கட்சி சார்பில்லா பிரச்சனைகள் ஏழாமல் காவல் துறையிடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் முக்கியமான பகுதிகளை கண்டறிந்து, ஏற்கனவே உள்ள பகுதிகளையும் மற்றும் தற்போது ஏதாவது அவ்வாறான பகுதிகள் உள்ளனவா என கண்டறிந்து அதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் பிரித்து கொடுக்கும்பொழுது வார்டு வாரியாக சரியான முறையில் பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் மற்ற வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலினை கொடுத்து விடக்கூடாது.

புதிய வாக்காளர்கள் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான 22.09.2021 அன்று வரை யாரேனும் விண்ணப்பத்திருந்தால் அவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் பதவியிடங்களுக்கான வேட்புமனு தாக்கலில் படிவம் 9-யை தயார் செய்யும் பொழுது சின்னங்கள் ஒதுக்கீட்டின்படி கவனமாக தயார் செய்ய வேண்டும் என்றும் படிவம் 9-யை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு கடல்சார் நிறுவன துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளருமான முனைவர் கே.பாஸ்கரன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்