Local Body Election Meeting

Publish Date : 02/05/2019
1

2

செ.வெ.எண்:- 25/2019 நாள்:- 29.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

உள்ளாட்சி தேர்தல்கள் 2019 தொடர்பாக, வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மீதான கருத்துக்கள் / ஆட்சேபணைகள் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 2019 தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின்படி, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 14.03.2019 அன்று வெளியீடு செய்யப்பட்ட 2834 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மீதான கருத்துக்கள் / ஆட்சேபணைகள் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று (29.04.2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மீதான கருத்துக்கள் ஃ ஆட்சேபணைகள் குறித்து சம்மந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ மனுக்கள் 10.05.2019 அன்று மாலை 5.00 மணி வரையில் வழங்க மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 10.05.2019 வரையில் வரப்பெறும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் கள ஆய்வு செய்து, மண்டல அலுவலர்கள் குறிப்புரையுடன் 11.05.2019 அன்று காலை 11.00 மணியளவில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் மண்டல அலுவலரின் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, 13.05.2019 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி.கவிதா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.