Close

MANIMEGALAI AWARD 2021-2022

Publish Date : 29/03/2022

செ.வெ.எண்:-64/2022

நாள்:31.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

2021-22-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2021-22-ஆம் ஆண்டிற்கான மாநில/மாவட்ட அளவிலான தகுதியான சிறந்த 10 சுய உதவிக்குழு/5 கிராம வறுமை ஒழிப்பு சங்கம் (VPRC) 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) /ஒரு வட்டார அளவிலான கூட்டமைப்பு(BLF) ஊரகப் பகுதிகளிலும் / 3 நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்பு(ALF) ஒரு பகுதி அளவிலான கூட்டமைப்பு (CLF) மற்றும் நகர்ப்புற அளவிலான 10 சுய உதவிக்குழுக்கள் ஆகிய கூட்டமைப்புகளுக்கு (SHG) மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

மேற்காணும் விருதுக்கான தகுதிகள் குறித்த விரிவான விபரங்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 2021-22-ஆம் ஆண்டிற்கு விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்களை அனைத்து நகராட்சி மற்றும் பேருராட்சிகளில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகராட்சி/ பேரூராட்சி சமுதாய அமைப்பாளர்களிடமும், ஊரகப் பகுதிகளில் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர்களிடம் வருகின்ற 06.04.2022-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.