Close

Market committee-Gloriso

Publish Date : 15/09/2023

செ.வெ.எண்:-29/2023

நாள்:13.09.2023

திண்டுக்கல் மாவட்டம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை கொள்முதல் மற்றும் விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கண்வலி கிழங்கு விதை விளைபொருள் கொள்முதல் மற்றும் விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது.

வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல் ) சட்டம் 1987 இன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஆகிய எட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் கண்வலி கிழங்கு விதை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் அறிக்கையிடப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெற்று கண்வலி கிழங்கு விதை விளைபொருளினை கொள்முதல் செய்திட வேண்டும். விவசாயிகள், கண்வலி கிழங்கு விதை விளைபொருளினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செயல்பட்டு வரும் தேசிய மின்னணு வேளாண் சற்தை திட்டத்தின் (e-NAM) மூலம் விற்பனை செய்திட ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.

எனவே, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், மேற்சொன்ன வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.