Mass contact Meeting

செ.வெ.எண்:-35/2023
நாள்:-15.02.2023
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நுாத்தலாபுரம் கிராமம், எஸ்.தும்மலப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,306 பயனாளிகளுக்கு ரூ.290.33 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நுாத்தலாபுரம் கிராமம், எஸ்.தும்மலப்பட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் இன்று(15.02.2023) நடைபெற்றது.
முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்து கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டார். முகாமில் 107 மனுக்கள் வரப்பெற்றன.
இம்முகாமில் வருவாய்த்துறை சார்பில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 662 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, ரூ.94.80 இலட்சம் மதிப்பீட்டில் 316 பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டா, 40 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா நகல், 11 பயனாளிகளுக்கு முழுப்புலம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.03 இலட்சம் மதிப்பீட்டில் 103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1.95 இலட்சம் மதிப்பீட்டில் 87 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக ரூ.6.03 இலட்சம் மதிப்பீட்டில் 75 பயனாளிகளுக்கு உதவிகள், 2 பயனாளிகளுக்கு சான்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.30,000 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.60,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.25,000 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு உதவிகள் என மொத்தம் 1,306 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 90 இலட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை அறிந்து அனைவரும் அதனை பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
இம்முகாமில், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி விஜயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ஜெ.பெருமாள்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) திரு.ரவிச்சந்திரன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சௌ.சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.சி.ரெங்கராஜ், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஷ்கோடி, ஊராட்சித்தலைவர் திரு.செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.