Media Centre – Collector Inspection

Publish Date : 21/03/2019
1

1 1

செ.வெ.எண்:- 29/2019 நாள்:-21.03.2019

திண்டுக்கல் மாவட்டம்

உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அனுமதியின்றி வெளியிடப்படும் அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை கண்காணித்திடும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஊடக மையத்தினை (Media Centre) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சியினரால் முன் அனுமதியின்றி நாளிதழ்கள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள, ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையத்தினை இன்று (21.03.2019) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் 130.நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, கடந்த 10.03.2019 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது.

நடைபெற உள்ள திண்டுக்கல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்-2019-ஐ, சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, கணக்கு குழு, கூர்ந்தாய்வுக்குழு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கினை கண்காணித்திட குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர்களால், செய்திதாள்களில் வெளியிடப்படும்; விளம்பரங்கள், உள்ளூர் தொலைகாட்சிகள் மற்றும் வாணொலியின் வாயிலாக வெளியிடப்படும் விளம்பரங்கள் ஆகியவைகள் அனைத்தும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவினரின் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும்.

அவ்வாறு அனுமதி இல்லாமல் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலம், தரைத்தளத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு மையம் அமைக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சியில் அரசியல் கட்சியினரால் அனுமதியின்றி ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிப்பதற்கும், நாளிதழ்கள் மற்றும் வாணொலியின் வாயிலாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிப்பதற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக்குழு தொடர்ச்சியாக உள்ளூர் தொலைகாட்சி ஒளிப்பரப்பினை கண்காணித்து, கணினியில் பதிவு செய்து, தேர்தல் விதிகளுக்கு மாற்றாக ஏதேனும் ஒளிப்பரப்பு இருப்பின், மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் திரு.இ.சாலிதளபதி, மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி), கண்காணிப்புக்குழு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்