Close

Medical claim INSTRUCTION

Publish Date : 31/12/2021

செ.வெ.எண்:-78/2021

நாள்:31.12.2021

அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுத் தொகை கோருவதற்கு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுத் தொகை கோருவதற்கு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு(Grievance Redressal Officer)-க்கு விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டுமென அரசானை எண் 160-ல் (நிதி-ஊதியங்கள்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 01.01.2022 முதல் அரசு ஊழியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, மருத்துவ செலவுத் தொகையினை மீளக்கோரும் விண்ணப்பங்களை அரசு ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலகம் மூலமாக, திண்டுக்கல் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.