Close

Medical college-White Coat Ceremony

Publish Date : 08/04/2022
.

செ.வெ.எண்:-17/2022

நாள்:08.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளை அங்கி விழா(White Coat Ceremony) – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளை அங்கி விழா(White Coat Ceremony) இன்று(08.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மருத்துவப் படிப்பு மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணிவித்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மருத்துவ பணி என்பது உயிரை காப்பாற்றும் மிகவும் மகத்தான சேவை பணியாகும். இந்த பணிக்கு இளம் தலைமுறையினரான நீங்கள் வந்துள்ளீர்கள். இந்த சேவைப்பணியை தூய்மையாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் சேவை புரிய வேண்டும். அதனை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை நிற அங்கி அணிந்து பணியாற்றுகிறீர்கள். அத்தகைய பெருமைக்குரிய பணிக்கு வந்துள்ள நீங்கள் நேர்மையுடனும், சேவை மனப்பான்மையுடனும், பெருமையுடனும் வெள்ளைக் கோட் அணிந்து தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.இவ்விழாவில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், துணை முதல்வர் மரு.எம்.சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.எஸ்.ஆர்.வீரமணி உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.