Close

Medical secretary Inspection

Publish Date : 11/04/2022
.

செ.வெ.எண்:-24/2022

நாள்:09.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப்பணிகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் ரூ.327 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப்பணிகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து, அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், மாணவ, மாணவியருக்கான விடுதிகள், அலுவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், சுற்றுச்சுவர் ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, 500 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வரும் கட்டடம் உட்பட பல்வேறு கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் ரூ.327 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள இடித்து அகற்றப்பட வேண்டிய பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினார்.

.

.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.த.கி.பாக்கியலட்சுமி, துணை இயக்குனர்; (சுகாதாரப் பணிகள்) மரு.மு.வரதராஜன், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.எஸ்.ஆர்.வீரமணி, பொதுப்பணித்துறை (மருத்துவப்பணிகள்) உதவி செயற்பொறியாளர் திரு.பாண்டியராஜன், உதவிப்பொறியாளர் திரு.மனோகரன் உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.