Mega Canals Cleaning Exhibition Camp

செ.வெ.எண்:-07/2021
நாள்:-02.10.2021
மெகா கால்வாய்கள் தூய்மைப்பணிகளின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிடடார்.
திண்டுக்கல் மாவட்டம், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டியிருந்த மெகா கல்வாய்கள் தூய்மைபணிகளின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, வடகிழக்கு பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட மெகா கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் திட்டத்தினை 20.09.2021 முதல் தமிழக அரசு அறிவுறுத்தியதின் பேரில் திண்டுக்கல் மாநகராட்சியின் 48 வார்டுகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்கள் மெகா காய்வாய்கள், நடுத்தர கால்வாய்கள், சிறிய கால்வாய்கள் என தரம்பரித்து தூர்வாரும் மாபெரும் பணி 20.09.2021 முதல் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய கால்வாய்கள் என மொத்தம் 105 கால்வாய்கள் சுமார் 45 கி.மீ தூரம், தூர்வாரி மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இப்பணிக்காக 10 ஜேசிபி இயந்திரங்கள், டிப்பர் லாரிகள் 2, டிராக்டர் 16, ஜெட்ராடர் வாகனங்கள் 2 மற்றும் 400 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் மாநகரிலுள்ள கழிவுநீர் ஓடைகளில் மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கபட்;டுள்ளது.
ஊரக பகுதிகளில் கழிவு நீர்வாய்கால்கள் சுமார் 97.1 கி.மீட்டர் தூர்வாரப்பட்டும், 405 பாலங்கள் தூர்வாரப்பட்டும், பெறிய, சிறிய, நடுத்தர வரத்து வாய்க்கால்கள் மொததம் 4352 வரத்து வாய்க்கால்கள் சுமார் 650 கி.மீ தூரம் தூர்வாரி மழை நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. இப்பணிக்காக 10 ஜேசிபி இயந்திரங்கள், டிப்பர் லாரிகள் 2, டிராக்டர் 4, ஜெட்ராடர் வாகனங்கள் 2 மற்றும் 3557 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் இதன் மூலம் 306 கிராம ஊராட்சிகளில் ஓடைகளில் மழை நீர் தேங்காமல் குளங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
23 பேரூராட்சிகளில் கழிவு நீர்வாய்கால்கள் சுமார் 395.663 கி.மீட்டர் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.. இப்பணிக்காக 9 ஜேசிபி இயந்திரங்கள், டிப்பர் லாரிகள் 3, டிராக்டர் 27, மின ஆட்டோ 13 மற்றும் 435 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் இதன் மூலம் 23 பேரூராட்சிகளில் ஓடைகளில் மழை நீர் தேங்காமல் குளங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூர்வாரப்பட்ட கால்வாய்களில் குப்பைகள், கட்டிட இடிபாடு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர பொருட்களை கொட்டாமல் மக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாhகள். மேலும், அனைத்து வீடுகளிலும் செயல்படாமல் உள்ள மழைநீர் சேகரிப்பு அபைபுகளை இயங்கிட ஏதுவாக பழுதுபார்க்க வேண்டும். இதன்மூலம் மழைநீர் சாலைகளில் செல்லாமல் நிலத்திற்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகும். இதன்மூலம் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருமதி.மனோரஞ்சிதம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்(பொ) திரு.பழனிக்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் திருமதி.இந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.