Close

Milch Cow loan Mela

Publish Date : 06/11/2023

செ.வெ.எண்:-03/2023

நாள்:-01.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கும் வகையில் 03.11.2023 முதல் 27.12.2023 வரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக கடன் மேளாக்கள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும், அவர்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி, வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தை உயர்த்த கறவை மாடு கடனுதவிகள் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ, பிஎம்இஜிஒய் (TAMCO, TABCEDCO, TAHDCO, PMEGY) போன்ற பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் கறவை மாடுகளுக்கான மானிய உதவிகளை பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற வழிவகை செய்து, கடனுதவி வழங்கும் வகையில் 03.11.2023 முதல் 27.12.2023 வரை ஊராட்சி ஒன்றியம் வாரியாக கடன் மேளாக்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டு, கூட்டுறவு சங்கங்கள், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைந்து கடனுதவி மேளாக்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம் குறவர் காலனியில் 03.11.2023 அன்றும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பூலாம்பட்டியில் 10.11.2023 அன்றும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் வேடசந்துாரில் 15.11.2023 அன்றும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் தருமத்துப்பட்டியில் 18.11.2023 அன்றும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கவிராயபுரத்தில் 22.11.2023 அன்றும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் பாளையத்தில் 24.11.2023 அன்றும், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம் வீரக்கல் கிராமத்தில் 29.11.2023 அன்றும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு கிராமத்தில் 06.12.2023 அன்றும், நத்தம் ஊராட்சி ஒன்றியம் நத்தத்தில் 08.12.2023 அன்றும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் எல்லப்பட்டியில் 13.12.2023 அன்றும், பழனி ஊராட்சி ஒன்றியம் புளியமரத்துசெட் கிராமத்தில் 15.12.2023 அன்றும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம் விருவீடு கிராமத்தில் 20.12.2023 அன்றும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்மலை கிராமத்தில் 22.12.2023 அன்றும், வடமதுரை ஊராட்சி ஒன்றியம் வடமதுரையில் 27.12.2023 அன்றும் கடன் மேளாக்கள் நடைபெறவுள்ளன.

இந்த கடன் மேளாக்களில் பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.