Close

millet festival

Publish Date : 07/02/2024

செ.வெ.எண்:-12/2024

நாள்:04.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத்திருவிழா 10.02.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத்திருவிழா, திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் 10.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

சிறுதானிய உணவுத்திருவிழாவில் பல்வேறு துறைசார்ந்த அலுவலர்களால் சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியும், விழிப்புணர்வு குறித்த விளக்கவுரைகள் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. விழாவில் பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் சிறுதானிய உணவுத்திருவிழாவில் கலந்துகொண்டு சிறுதானிய உணவுகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டும், சிறுதானியங்களின் பயன்பாடு மற்றும் சிறப்புகளை அறிந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.