Close

Mini Marathan -Meendum Majapai Awarness

Publish Date : 21/04/2023
.

செ.வெ.எண்:-22/2023

நாள்:16.04.2023

திண்டுக்கலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார் அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (16.04.2023) நடைபெற்றது.

மினி மாரத்தான் போட்டிகளை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக மைதானத்தில் துவங்கப்பட்டு, பேருந்து நிலையம், மணிக்குண்டு, வெள்ளை வினாயகர் கோவில், பழனி சாலை, தாடிக்கொம்பு சாலை, எம்.வி.எம் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இப்போட்டிகள் ஆண், பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் 400-க்கும் மேற்பட்டவர்களும், பெண்கள் பிரிவில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி வெற்றவர்களுக்கு ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரு பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.2000/-, மூன்றாம் பரிசு ரூ.1000/-, ஆண்கள் பிரிவில் 7 நபர்களுக்கும், பெண்கள் பிரிவில் 7 நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக தலா ரூ.500/- வழங்கப்பட்டது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மாவட்ட பொறியாளர் திரு.மணிமாறன், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உதவி செயற்பொறியாளர் திருமதி உதயா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி ம.ரோஸ் பாத்திமா மேரி, திண்டுக்கல் தடகள சங்க செயலாளர் திரு.துரைராஜ், யுக்தா அறக்கட்டளை நிர்வாகி திரு.பிரசாத் சக்கரவர்த்தி, கணேஷ் அன்கோ திரு.ஜெயக்குமார், தளகள சங்க நிர்வாகிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.