Close

Monday GDP

Publish Date : 30/09/2021

செ.வெ.எண்:-61/2021

நாள்:-30.09.2021

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர் வரும் 04.10.2021 முதல் பிரதி வாரம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் எதிர் வரும் 04.10.2021 காலை 10.00 மணி முதல் பிரதி வாரம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு செய்ய வருகை தரும் பொதுமக்கள் கீழ் கண்ட நிபந்தனைகளை பின்பற்றி வருகை தருமாறு தெரிவிக்கப்படுகிறது.

1.மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு செய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்

2.10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

3.மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளாமல் அவர்கள் சார்பாக அவர்களது இரத்த சம்மந்த உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மனு அளிக்கலாம்.

4.மனு செய்ய வரும் பொதுமக்கள் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் தங்கள் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்தும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.

5.மனு செய்ய வரும் பொது மக்கள் சமூக இடைவெளி 6 அடியைப் பின்பற்றி வரிசையாக மனு செய்ய வேண்டும்.

6.முககவசம் அணியாதவர்கள் நேரடியாக மனு அளிக்க அனுமதிக்கபடமாட்டார்கள்.

7.காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள நபர்கள் நேரடியாக மனு அளிக்க அனுமதி இல்லை. இவ்வாறு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்