Close

Monday Grievance Day Petition

Publish Date : 10/05/2022
.

செ.வெ.எண்:-17/2022

நாள்:09.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.05.2022) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.

இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 273 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்;. மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளாக, நிலக்கோட்டை வட்டம், வத்தலக்குண்டு பகுதியை சார்ந்த திரு.அபுதாஹீர் த.பெ.சாகுல் ஹமீது மற்றும் சிக்கந்திரம்மாள் க.பெ.பீர் ஒலி ஆகிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடந்த 02.05.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தார்கள். கேரிக்கை மனுவினை ஒரு வார காலத்தில் விரைந்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு பகுதியில் இலவச வீட்டுமனை பட்டாவும் மேலும் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தலா ரூ.2.48 லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்கான ஆணையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள்; வழங்கினார். மேலும், வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம், அவர்கள் வீடுகட்டும் பணிகளை தொடர்ந்து கண்காணித்து தேவiயான உதவிகளையும் செய்து தர வேண்டுமென அறிவுறுத்தினார். ஆதனை தொடர்ந்து, பாம்பு கடித்து உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சமும், நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் வாரிசுதாருக்கு 1 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.