Close

Monday Grievance Day Petition

Publish Date : 30/01/2024
.

செ.வெ.எண்:-61/2024

நாள்:-29.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

87 பயனாளிகளுக்கு ரூ.9.74 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.01.2024) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 194 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 8 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் 8 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8.00 இலட்சத்திற்கான காசோலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1.06 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் மொத்தம் ரூ.4.24 இலட்சம் மதிப்பிலும், இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் 75 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பில் மொத்தம் ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ.9.74 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற சுவர் இதழ் போட்டி, பாட்டுப்போட்டி, கடிதம் எழுதுதல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நடைபெற்ற ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 10 மகளிர் என மொத்தம் 43 நபர்களுக்கு மொத்தம் ரூ.33,000 மதிப்பிலான பரிசுத்தொகைகள், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் 18 பேருக்கு மொத்தம் ரூ.1.32 இலட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை என மொத்தம் 61 நபர்களுக்கு ரூ.1.65 இலட்சம் மதிப்பிலான பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காகௌரி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்கநர் திரு.பெ.இளங்கோ, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.