Close

Monday Grievance Day Petition

Publish Date : 14/06/2022
.

செ.வெ.எண்:-39/2022

நாள்: 13.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(13.06.2022) நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.

இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 223 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும், பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ்; வேடசந்தூர் பகுதியில் கேஸ் ஸ்டவ் வெடித்து உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், இப்பகுதியில் நீரில் மூழ்கி உயிரிந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், நிலக்கோட்டை வட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தரின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளினையொட்டி 19.04.2022 அன்று நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செல்வி ப.சாதனாவிற்கு முதல் பரிசு ரூ.5000/-, நத்தம் துரைக்கமலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திரு.நா.தனூஷ்விற்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, திண்டுக்கல் புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்வி ச.அமீர்நிஷாவிற்கு மூன்றாம் பரிசு ரூ.2000/-, வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி திரு.திலீப்குமாருக்கு சிறப்பு பரிசு ரூ.2000/-, திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளி ப.முகம்மது உசேனுக்கு சிறப்பு பரிசு ரூ.2000க்கான பரிசுத்தொகையினையும். மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திரு.மா.கௌஸ்பாஷாவிற்கு முதல் பரிசு ரூ.5000/-, எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி செல்வி.க.புவனேஸ்வரிக்கு இரண்டாம் பரிசு ரூ.3000/-, கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்வி ரா.துர்காவிற்கு மூன்றாம் பரிசு ரூ.2000க்கான பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், உதவி இயக்குநர்(மு.கூ.பொ) தமிழ்வளர்ச்சி திரு.பெ.இளங்கோ, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.எல்.ராஜசேகர், உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.