Close

Grievance Day Petition News

Publish Date : 07/03/2022

செ.வெ.எண்:-12/2022

நாள்:07.03.2022

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் 19.02.2022 அன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாராண தேர்தல்கள் தொடர்பான மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் எதிர் வரும் 07.03.2022 காலை 10.00 மணிமுதல் பிரதி வாரம் தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு செய்ய வருகை தரும் பொதுமக்கள் கீழ் கண்ட நிபந்தனைகளை பின்பற்றி மனு அளிக்க தெரிவிக்கப்படுகிறது.

  1. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு செய்ய வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும்
  2. மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்கள் சார்பாக அவர்களது இரத்த சம்மந்த உறவினர்கள் அல்லது பிரதிநிதிகள் மனு அளிக்கலாம்.
  3. மனு செய்ய வரும் பொதுமக்கள் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் தங்கள் உடல் வெப்பநிலை குறித்து பரிசோதனை செய்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.
  4. மனு செய்ய வரும் பொது மக்கள் சமூக இடைவெளி (6 அடி) கடைபிடித்து வரிசையாக மனு செய்ய வேண்டும்.
  5. முககவசம் அணியாதவர்கள் நேரடியாக மனு அளிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  6. காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள நபர்கள் நேரடியாக மனு அளிக்க அனுமதி இல்லை.

இவ்வாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.