Monitoring Officer Inspection and Meeting

செ.வெ.எண்:-65/2025
நாள்:22.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று(22.02.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மருந்து கிட்டங்கி, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணிகள், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்ட இடங்கள், மினி பேருந்துகள் இயக்கம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, முதல்வரின் மருந்தகம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை மொத்த விற்பனை மருந்தக கிடங்கு, கன்னிவாடியில் கூட்டுறவுத்துறை சார்பில் அமைக்கப்படவுள்ள முதல்வரின் மருந்தகம் மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்படவுள்ள முதல்வரின் மருந்தகம், பள்ளபட்டி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள், கோட்டைப்பட்டி பிரிவு முதல் தர்மத்துப்பட்டி வரை காமாட்சிபுரம், மைலாப்பூர், அனுப்பப்பட்டி, சாமியார்பட்டி, வட்டபாறை, கன்னிவாடி வழியாக மினிபேருந்து இயக்குவது தொடர்பாக மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் நிருவாக இயக்குநர் மருத்துவர் மரு.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாநகராட்சி ஆணையாளர் திரு.இரா.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.