Close

Monitoring officer Inspection

Publish Date : 08/07/2019

செ.வெ.எண்:-20/2019 நாள்:- 05.07.2019

w1

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் விநியோகம் குறித்து இன்று (05.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கென அரசால் துரிதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் துறைசார்ந்த தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு, துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, அதற்கென அந்தந்த பகுதியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்;டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கப்டும் சீரான குடிநீர் விநியோகம் குறித்து அரசின் கவனத்திற்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குடிநீர் விநியோக பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (05.07.2019) நிலக்கோட்டை ஒன்றியம் சிலுக்குவார்பட்டி, நரியூத்து குடிநீர் விநியோகப்பணிகள் குறித்தும், ஆழ்துளை கிணற்றி;ன் மூலம் குடிநீர் விநியோகம் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிகுட்பட்;ட 17 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படும் 7.55 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம் மற்றும் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் 4 இலட்சம் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம் மற்றும் ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள இடைநிலை நீரேற்று நிலையம் ஆகியவை மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி நத்தம் கூட்டுக்குடிநீர் திட்;டத்தின் மூலம் குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து, நீலமலைக்கோட்டை ஊராட்சி, திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், கிராமங்களில் நீர் நிலைகள் உள்ள இடங்களை கண்டறிந்து ஆழ்துளை குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எந்தந்த பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், நகர், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர் பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்கல்வித்துறை முதன்மை செயலர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வில், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

w2w3

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்