Close

Murungai Tree Plantation

Publish Date : 01/06/2022
.

செ.வெ.எண்:-62/2022

நாள்:31.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் முருங்கை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் முருங்கை நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(31.05.2022) தொடங்கி வைத்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை கண்டறிந்து, மருத்துவ பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 32 ஆயிரம் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளாகவும், 7,700 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டிய குழந்தைகளாகவும் கண்டறியப்பட்டு;ள்ளன. இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறையின் மூலம் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு முருங்கை கீரை, முருங்கை சூப் என சத்துக்கள் நிறைந்த உணவுகள் வழங்கும் வகையில் அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு செய்து, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு செய்யும் பணியை செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(31.05.2022) முருங்கை நடவு செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.கிருஷ்ணன், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் திருமதி லதாதர்மராஜ், திண்டுக்கல் வட்டாட்சியர்(மேற்கு) திரு.ரமேஷ்பாபு, தலைமையித்து துணை வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், பசுமை சுற்றுச்சூழல் இயக்கம் அமைப்பாளர் திரு.பசுமை பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.