Close

MY BHARAT EXPERIENTIAL LEARNING PROGRAMME – NEHRU YUVA KENDRA

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-11/2025

நாள்: 04.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

இளையோர்களுக்கு அனுபவ கற்றல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவ கேந்திரா மை பாரத் அலுவலகம் மூலமாக இளையோர்களுக்கு அனுபவ கற்றல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.03.2025) நடைபெற்றது.

இளைஞர்களின் திறன் வளர்ச்சியை ஏற்படுத்துதல், ஒவ்வொரு துறையிலும் இளைஞர்கள் எவ்வாறு பயன்பட வேண்டும் என்பது குறித்தும். அதில் அவர்கள் வேலைவாய்ப்பை எவ்வாறு ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் கூட்டம் நடைபெற்றது.

காவல் துறை, மருத்துவம், மாவட்ட தொழில் மையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, வங்கி சார்ந்த அலுவலர்கள், நாட்டு நலப்பணி திட்டம் சார்ந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.