Close

Naanmuthalvan – Meeting

Publish Date : 10/03/2023
.

செ.வெ.எண்:-58/2023

நாள்:-27.02.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் நிகழ்ச்சி திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கல்லுாரி களப்பயணம் நிகழ்ச்சி திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.02.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் கல்வி தரத்தினை உயர்த்திட தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தற்போது அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பயணம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். இங்கு பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருகை தந்துள்ளீர்கள். இங்கு வருகை தந்துள்ள பல மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருவது இது முதல் முறையாக கூட இருக்கும். கல்லூரிக்கு சென்று பார்ப்பதன் மூலம் உயர் கல்வி பயிலும் விழிப்புணர்வு அதிகரிக்கும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள், இதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியர் உயர் கல்வி படிக்க மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி படிக்கும் சதவீதம் மிகவும் அதிகரித்து உள்ளது. கல்லூரிகளில் ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி துறைகள் இருக்கும், அத்துறைகளுக்கு துறை தலைவர்கள், பல்வேறு பேராசிரியர்கள் இருப்பார்கள். இவைகளை பார்க்கும்போது நாம் இதுபோன்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம், உந்துதல் கிடைக்கும். நீங்கள் என்ன உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில என்னென்ன படிப்புகள் உள்ளது, வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்த கையேடுகள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உயர் கல்வி வழங்க பல்வேறு பயிற்சிகளை வழங்கிடவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளத்தனையது உயர்வு என்பதைப்போல நாம் என்ன நினைக்கிறோமோ அதன்படியே நாம் உயர்ந்து வருவோம். உங்களால் முடியும் என முயற்சி செய்து உயர்வடைய வேண்டும்.

தமிழக அரசும் உயர்கல்வி பயில பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவைகளை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு எவ்வகையான பயிற்சிகள் தேவை என்பதை அறிந்து மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு உதவி செய்யும். முயற்சி வெற்றி பெறும், நீங்கள் சிறப்பான முயற்சியை மேற்கொண்டு உயர்வடைய வேண்டும், உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திட சிறந்த கல்வியாளர்களாக உயர்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பதிவாளர் திரு.சிவக்குமார், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நாட்டுநலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.நாகமணி, காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கல்வி இயக்குநர் முனைவர் ரா.உதயக்குமார், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் புலமுதன்மையர் மற்றும் பேராசிரியர் முனைவர் கௌ.பாஸ்கரன், காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பணியக இயக்குநர் முனைவர் அ.இராமநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நசாருதீன், நாட்டுநலப்பணித்திட்டம் மாவட்டத் தொடர்பு அலுவலர் திரு.எம்.சௌந்தரராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.