Nilakkottai Mass Conduct

Publish Date : 10/07/2019
1

5 3

செ.வெ.எண்:-32/2019 நாள்: 10.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை வட்டம் சந்தையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 269 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சந்தையூர் கிராமத்தில்; இன்று (10.07.2019) மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்;தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்;ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒரு கிராமத்தை தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்களை பற்றி அந்தந்த துறை அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

தமிழக அரசு, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக அனைத்துத்துறை அலுவலர்களுடன் மக்கள் தொடர்பு முகாம் இங்கு நடத்தப்பட்டுள்ளது. இம்முகாமின் நோக்கம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, அதன் மூலம் அவர்களை பயன்பெறச்செய்வதே இதுபோன்று மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

மேலும், பல்வேறு திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்ததை பொதுமக்கள் தெரிந்து கொண்டு, அத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். மேலும் அரசின் திட்டங்கள் மூலம் பல்வேறு சான்றிதழ்களை பெறுவது தொடர்பாக, மனு அளிப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அலையாமல், வீட்டில் இருந்தபடியும் மற்றும் இ-சேவை மையம் மூலமாகவும் பெறுவதற்கு, அரசால் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மனுக்களின் நிலை குறித்து குறுந்தகவல்கள் உள்ளிட்ட வசதிகள் மூலமாக எளிதில் அறிந்து கொள்ளலாம். மேலும், இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை எளிதில் பெறுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கூலி வேலை செய்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக, புதிய தொழில் தொடங்கி அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தினை உயர்த்;திக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பெண்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறைகளின் மூலமாக, துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அதன் மூலம் பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஉதவித்திட்டம் (PM KISAN SAMMAN NIDHI YOJANA) கடந்த – 24.02.2019 முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்றவர்களை தவிர்த்து மீதமுள்ள தகுதியான அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம், நடைபெற்ற இந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.35,720 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திம், 4 பயனாளிகளுக்கு ரூ.20,072 மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.60,216 மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டி, 4 பயனாளிகளுக்கு இந்து காட்டு நாயக்கன்நல வாரிய அடையாள அட்டை, வருவாய்த்துறையின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.3.48 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 165 பயனாளிகளுக்கு முழுபுலம் பட்டா மாறுதல்;, 7 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல், 30 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ-க்கான மாற்றுத்திறனாளி உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000ஃ- க்கான இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.39,276 மதிப்பீட்டில் இடுபொருள் மற்றும் உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்புத்திட்டத்தின்கீழ் 5 பயனாளிகளுக்கு எரிவாயு இணைப்பு உள்ளிட்ட 269 பயனாளிகளுக்கு தொத்தம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப. அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (திண்டுக்கல்) திருமதி.உஷா, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.நவனீதகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு.சிவக்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.முத்துமீனாள் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்