Close

Niral Thiruvizha

Publish Date : 14/11/2023
.

செ.வெ.எண்:-28/2023

நாள்:-09.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ “நான்‌ முதல்வன் நிரல்‌ திருவிழா” என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்‌ நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ “நான்‌ முதல்வன் நிரல்‌ திருவிழா” என்ற திட்டத்திற்கான பயிற்சி பட்டறை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ இன்று(09.11.2023) நடைபெற்றது.

இந்த புத்தாக்க பயிற்சி பட்டறையில்‌ உயர்கல்வி மாணவர்கள்‌ நடப்பு ஆண்டில்‌ புதியதாக கண்டுபிடிப்பு செய்வதற்கு தேவையான “புத்தாக்க தேவைகள்‌, பிரச்சனைகள்‌ கண்டறிதல்‌” என்பதற்கான பயிற்சி மற்றும்‌ செயலாக்கம்‌ நடைபெற்றது.

இந்த பயிற்சியை தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டு கழகம் (Tamilnadu Skill Development Corporation) மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் (Enterpreneurship Development and Innovation Institute) ஆகிய இரு நிறுவனங்களும்‌ கூட்டாக நடத்தின. பயிற்சியின்‌போது திண்டுக்கல் மாவட்டத்தில்‌ உள்ள தொழில்‌ முனைவோர்கள்‌ மற்றும் தொழிலதிபர்கள்‌ கலந்து கொண்டு, நான்‌ முதல்வன்‌ நிரல்‌ திருவிழாவுக்கான அடிப்படையாக செயல்படும்‌ “புத்தாக்க பிரச்சனைகள்‌ தேவைகள்” குறித்து தங்கள்‌ கருத்துக்களை தெரிவித்தனர். அதன்‌ அடிப்படையில்‌ உயர்கல்வி மாணவர்கள்‌ நடப்பாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில்‌ மைய பொதுமேலாளர் திரு.கமலக்கண்ணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் திருமதி இராஜேஸ்வரி, தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டு கழகம்‌ பயிற்சியானர் திருமதி அர்ச்சனா, தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் திட்ட மேலாளர் திரு.இளஞ்செழியன், சிறு மற்றும் குறு தொழில் நிறுனங்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.அண்ணாத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.