Close

Nomination Instruction Meeting

Publish Date : 19/03/2019
1

1 2

செ.வெ.எண்:- 23/2019 நாள்:- 19.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல்-2019-ஐ முன்னிட்டு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆடசியர் அலுவலகத்தில் இன்று (19.03.2019) தேர்தல் செலவின மேற்பார்வையாளர் திரு.லோகேஷ்குமார் ஜெயின்,I.R.S அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் 19.03.2019 முதல் 26.03.2019 வரை (பொது விடுமுறை நாட்களான 23.03.2019 மற்றும் 24.03.2019 நீங்கலாக) நடைபெறவுள்ளது. இந்த தினங்களில் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வேட்புமனுவினை 22.திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடமோ அல்லது தேர்தல் நடத்தும் குறிப்பிட்ட உதவி அலுவலர் மற்றும் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரிடமோ திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் அறை எண்: 136-ல் தாக்கல் செய்யலாம். 26.03.2019 அன்று பிற்பகல் 03.00 மணிக்குப்பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.
வேட்பாளராகப் போட்டியிட 25 வயது (26.03.2019 அன்று) பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குறியீடு செய்யப்பட்ட தூரத்திற்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிகள் முழுவதும் ஏனைநழபசயிhல செய்யப்படவுள்ளதால், 5 நபர்களுக்கு மேல் அறைக்குள் நுழையும்பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி வேட்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேட்பாளர் வேட்புமனுவினை படிவம் 2ஏ-யில் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தில் 07.07.2017-ம் தேதிய கடிதத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி வேட்புமனுவில் வேட்பாளரின் சமீபத்திய ஸ்டாம்ப் அளவிளான புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். (வெள்ளைநிற பின்புலத்தில் நேர்நோக்கிய வண்ணம் இருத்தல் வேண்டும்)

பொதுப்பிரிவு வேட்பாளராக இருப்பின் காப்புத்தொகை ரூ.25,000/- செலுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் காப்புத்தொகை ரூ.12500/- செலுத்தப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சான்று அளிக்கப்படவேண்டும். காப்புத்தொகையானது ரொக்கமாகவோ அல்லது கருவூலத்தில் செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டுடன் அளிக்கப்பட வேண்டும். முதல் வேட்புமனு தாக்கலின்போதே காப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும். இதற்கு கால அவகாசம் ஏதும் வழங்கப்படமாட்டாது. வங்கி வரைவோலை அல்லது காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வேட்புமனுவானது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் நடத்தும் குறிப்பிட்ட உதவி அலுவலரிடம் மட்டுமே நேரில் வழங்கப்பட வேண்டும். அஞ்சல் மூலம் அனுப்பப்படும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

முன்மொழிபவர்களில் எவரேனும் கைரேகை இடும் நபர்களாக இருப்பின் தேர்தல் நடத்தும் குறிப்பிட்ட உதவி அலுவலரின் முன்னிலையில் அவரின் ஒப்புதலுடன் கைரேகை இடப்படவேண்டும்.
முன்மொழிபவர்கள் 22.திண்டுக்கல் பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களாக இருக்க வேண்டும்.
வேட்பாளர் வேறு மக்களவைத்தொகுதியில் வாக்காளராக இருந்தால் அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் சான்றொப்பமிட்ட வாக்காளர் பட்டியல் நகல் பெற்று இணைக்கப்பட வேண்டும். இச்சான்றினை வேட்புமனு பரிசீலனை செய்யும் 27.03.2019 காலை 11.00 மணிக்கு துவங்கி வேட்புமனு பரிசீலனை முடிவதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படவில்லை எனில் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படும்.
மத்திய அரசு அல்லது மாநில அரசில் பணியாற்றி கடந்த 5 வருடங்களுக்குள் பணி நீக்கறவு செய்யப்பட்டிருந்தால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தடையின்மைச்சான்று பெற்று சமர்ப்பிக்கப்படவேண்டும்

இந்திய தேர்தல் ஆணைய கடித எண்: 3/4/2017/SDR/Vol.II dated 10th October 2018-ன்படி திருத்தி அமைக்கப்பட்ட படிவம் 26-ல் உறுதிமொழிப்படிவம் அளிக்கப்பட வேண்டும். எந்த ஒரு இடத்திலும் பதில் அளிக்கப்படாமல் கோடு இடக்கூடாது. இந்த படிவத்தில் உள்ள அனைத்து விபரங்களும் விடுதலின்றி ரூ.20/- மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் தட்டச்சு செய்து Notary Public மேலொப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும். எந்தவொரு விபரமானது பூர்த்தி செய்யப்படாமல் விட்டிருப்பது கண்டறியப்பட்டால், வேட்புமனு நிராகரிக்கப்படும். இந்த திருத்தி அமைக்கப்பட்ட படிவம்-26 ஆனது (அசல் மற்றும் நான்கு பிரதிகள்) 26.03.2019 பிற்பகல் 03.00 மணிக்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படவில்லை எனில் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்பதற்கான உறுதிமொழியினை வேட்புமனு தாக்கலின்போது அளிக்க வேண்டும். அவ்வாறு உடனடியாக அளிக்க இயலாத நேர்வுகளில் 26.03.2019 -க்குள் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கான சான்றினை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படவில்லை எனில் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்;சை வேட்பாளர்களுக்கு 10 வாக்காளர்கள் முன்மொழிவு செய்தல் வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளாக வழங்கப்பட்ட படிவம்-A மற்றும் B ஆகியவற்றை அசலில் அளிக்க வேண்டும். ஒளிப்படநகல், அச்சுநகல், நிகரி நகல், மின்னஞ்சல் நகல் ஆகியவை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்தப் படிவங்கள் 26.03.2019 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு முன்னதாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அளிக்கப்படவில்லை எனில் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக எடுத்துக்கொள்ளப்படுவார்.

மேலும் வேட்பாளர்கள் கீழ்க்காணும் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தவறாது அளிக்க வேண்டும்.

ஸ்டாம்ப் சைஸ் அளவிளான (2 செ.மீ. அகலம் x 2.5 செ.மீ. உயரம்) புகைப்படங்கள் 5 (பின்புறம் வேட்பாளர் தனது பெயரைக்குறிப்பிட்டு கையொப்பம் இட வேண்டும்)

வேட்பாளர்கள் தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண், வங்கி கணக்கு எண் தொடர்பாக அளிக்கப்பட்ட படிவம்.
வாக்குச்சீட்டில் தங்களது பெயர் ஆங்கிலம் மற்றும் தமிழில் எவ்வாறு இடம் பெற வேண்டும் என்பதற்கான படிவங்கள் அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பழனி சார் ஆட்சியர் திரு.அருண்ராஜ்.,இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.