Close

NSV-Family Planning

Publish Date : 25/11/2024
.

செ.வெ.எண்:-61/2024

நாள்:-25.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை இருவார விழா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.எஸ்.வி.(NSV) ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை இருவார விழா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(25.11.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு குடும்ப நலத் துறை, திண்டுக்கல் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பாக என்.எஸ்.வி.(NSV) ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை இருவார விழா விழிப்புணர்வு பிரச்சாரம் 21.11.2024 முதல் 04.12.2024 வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 21.11.2024 முதல் 27.11.2024 வரை விழிப்புணர்வு வாரமாகவும், 28.11.2024 முதல் 04.12.2024 வரை சேவை வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பழனி அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் 28.11.2024 முதல் 04.12.2024 வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ஆர்.பூமிநாதன், துணை இயக்குநர்(மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்) மரு.க.கௌசல்யாதேவி, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் திரு.ஜெ.மானெக்ஷா, இளநிலை நிர்வாக அலுவலர் திரு.த.பார்த்தசாரதி, அலுவலகக் கண்காணிப்பாளர் திரு.இ.ஆரோக்கியபாப்புலெட், புள்ளிவிபர உதவியாளர் திரு.ப.பிரபு, அலுவலக பணியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.