NTC Certificate
செ.வெ.எண்:-29/2022
நாள்:15.02.2022
திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் அசல் தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர்களுக்கு 1970 முதல் 2020-ஆம் ஆண்டு வரை அசல் தேசிய தொழிற்சான்றிதழ்கள்(NTC) மற்றும் 2013 – 2017 தோல்வியுற்ற மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ள பயிற்சியாளர்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டுக்கல் முதல்வரை நேரடியாக அணுகி தங்களுடைய சான்றிதழ்களை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அலுவலகத்திற்கு வரும் பொழுது அடையாள அட்டை தேர்வு நுழைவுச்சீட்டு (Hall Ticket) / ஆதார் அட்டை கொண்டு வந்து காண்பித்து தேசிய தொழிற்சான்றிதழை பெற்று செல்லலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.