Close

NTC CORRECTION

Publish Date : 14/02/2022

செ.வெ.எண்:-27/2022

நாள்:14.02.2022

தேசிய தொழிற்சான்றிதழில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) கடந்த 2014-லிருந்து 2020 வரை பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 2014-க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கும் தேசிய தொழிற்சான்றிதழில் (National Trade Certificate) பெயர், தந்தையின் பெயர், தாயாரின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் போன்ற ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை சரி செய்ய தற்போது காலஅவகாசம் 02.03.2022 வரை வழங்கப்பட்டுள்ளது.

இது கடைசி சந்தர்ப்பமாக உள்ளதால் பயிற்சியாளர்கள் திருத்தம் இருப்பின் உடன் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) தொடர்பு கொண்டு, திருத்தங்கள் மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.