Close

O Micron awareness

Publish Date : 02/12/2021

செ.வெ.எண்:-04/2021

நாள்:02.12.2021

‘ஓமைக்ரான்’ கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பொதுமக்கள் சமுதாய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், 2 தவணை தடுப்பூசிகளை தவறாமல் செலுத்தி தற்கொத்துக்கொள்ள வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 நோய் ஏற்படக் காரணமான கொரோனா வைரஸ், தனது மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸாக தோன்றுகிறது. இதுவரை ஆல்பா, பீட்டா, டெல்டா போன்ற உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சமீபகாலமாக, தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் உள்ளிட்டவற்றில் கோவிட் தொற்று அதிவேகமாக அதிகரிப்பதற்கு தற்போது வைரஸில் ஏற்பட்டுள்ள ‘ஓமைக்ரான்’ உருமாற்றமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. ‘ஓமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் மூலம் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் ‘ஓமைக்ரான்’ கொரோனா வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் இந்நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு விமானப்பயணிகளை தொடர்ந்து கண்காணித்தல், RT-PCR பரிசோதனை செய்தல் போன்றவை செய்யப்பட்டு வருகிறது. எனினும் முதல் மற்றும் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாகவும், தீவிர சிகிச்சை தேவைப்படுவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால், பொதுமக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

மேலும், பொதுமக்கள் சமுதாய தடுப்பு நடவடிக்கைகளான பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.