Close

Observer, DEO Inspection-EVMs sending to polling Stations

Publish Date : 05/04/2021
.

செ.வெ.எண்:-07/2021

நாள்:-05.04.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான உபகரணங்களை அனுப்பும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான உபகரணங்களை அனுப்பும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் (திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகள்) திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று(05.04.2021) ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதையடுத்து, 06.04.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 397 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 954 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 477 கட்டுப்பாட்டு கருவிகள், 536 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி தகுந்த பாதுகாப்புடன் வைக்கும் பணியை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று(05.04.2021) ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.