Close

PA AGRI Department

Publish Date : 08/11/2021

செ.வெ.எண்:-14/2021

நாள்:08.11.2021

திண்டுக்கல் மாவட்ட விவசாயகளின் கவனத்திற்கு தற்பொழுது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையானது தங்களுடைய பயிர் நிலைமைக்கு ஏற்ப பாதகங்களை விளைவிக்கக்கூடும். பயிர் விளையும் நிலையிலும் உள்ளது. இந்த நிலையில் அனைத்து வயல்களிலும் தண்ணீர் தேங்காதவாறு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும்.

மேலும் பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர் வட்டாரங்களில் ஒருசில பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதை வயலில் இருந்து வடிகட்டிட வேண்டும். மேலும் ஆங்காங்கே தோட்டங்களில் உள்ள மரங்களில் உள்ள கிளைகளை அப்புறப்படுத்தி, அகற்றி மரங்கள் சாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தென்னை மரங்களில் முற்றிய இலைகளை அகற்றிவிட்டு, இலைகள் மழையில் ஒடிந்து விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் மரங்களைச் சுற்றி மண் அணைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் வருகின்ற 9ஆம் தேதியன்று வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் அதிக அளவு மழைப்பொழிவு இருக்குமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஆகவே விவசாயிகள் தங்களுடைய வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் காய்கறி பயிர்கள் உள்ளிட்ட அனைத்து தோட்டக்கலைப் பயிர்களும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உரங்களை அதிகம் இடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். உரங்கள் இட வேண்டிய தருணம் இருப்பின் அவற்றை பிரித்து தேவைக்கேற்ப இட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தையும், பயிர் சேதம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.