Close

Padhma Award 2021

Publish Date : 15/09/2020

செ.வெ.எண்:- 09/2020

நாள்:-13.09.2020

திண்டுக்கல் மாவட்டம்

“பத்ம விருது” 2021-ஆம் ஆண்டு பன்முகத் திறமைக்கான கலை,இலக்கியம்,கல்வி,விளையாட்டு,மருத்துவம்,அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக அளப்பரிய சாதனை புரிந்தவர்கள் விருதை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

பன்முகத் திறமைக்காண விருதான “பத்ம விருது” 2021-ஆம் ஆண்டிற்கு கலை,இலக்கியம்,கல்வி,விளையாட்டு, மருத்துவம்,அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2021-ஆம் ஆண்டு நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) உடன் விண்ணப்பிக்கலாம்.பன்முகத்திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்து 15.09.2020-க்குள் இணையதள (www.padmaawards.gov.in)முகவரியின் மூலம் வரவேற்கப்படுகிறது. பிற முறையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

15.09.2020-க்குள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் இணையத்தில் விண்ணப்பித்த விவரத்தினை மாவட்ட சமூக நல அலுவலரை 0451-2460092 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.